மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி 

மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.   
பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, பெரம்பலூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.
பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, பெரம்பலூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.

பெரம்பலூர்: மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, பெரம்பலூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.   

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தைச சேர்ந்தவர் எஸ். சங்கர் (43). இவர், கடந்த 23 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 50 நாள்களுக்கு முன் விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துச்சென்ற சங்கர் மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். 

இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி பணியிலிருந்தபோது மாரடைப்பால் சங்கர் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் அவரது குடும்பதினருக்கு தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த சங்கரின் உடல் ராணுவ நடைமுறைகள் முடிந்து, அவரது சொந்த கிராமத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. 

இதையடுத்து, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ப. ஶ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி. ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அங்குள்ள மயானத்துக்கு ராணுவ வீரரின் உடல் கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com