தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரு சில தினங்கள் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்திற்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் கரோனா தடுப்பூசி போதுமானதாக இல்லை. தமிழகத்தில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் கரோனா  தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com