உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு: ஸ்டாலின் கடிதம்

வெளிநாடுகளிலிருந்து உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு: ஸ்டாலின் கடிதம்
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு: ஸ்டாலின் கடிதம்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், முதுகெலும்பு தசை செயலிழப்பு  சிகிச்சைகளுக்கு, மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மரபணு நோய் பாதித்த ஒரு நபருக்கு செலுத்த வேண்டிய மருந்தின் விலை ரூ.16 கோடியாக உள்ளது. இதுபோன்ற மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதுகெலும்பு தசை செயலிழப்பு பாதிப்புக்கு ஆண்டுக்கு 90 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய்க்கான மருந்துகளும், சிகிச்சையும் அதிக விலை கொண்டதாக இருப்பதால், இந்நோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்கான செலவை மேற்கொள்ள கடும் சிரமப்படுகிறார்கள்.

இந்த மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்போது, சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அண்மையில், ஒரு குழந்தைக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த மருந்து மீதான வரிகளை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

எனவே, நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க  மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com