உண்மையான சித்தாந்தத்தின் அடிப்படையில் இருப்பது பாஜக: அண்ணாமலை

தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடியது பாஜக என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் புதன்கிழமை கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் புதன்கிழமை கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

திருப்பூர்: தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடியது பாஜக என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

பாஜகவின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் வரும் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதற்காக கோவையில் இருந்து சென்னை செல்லும் அண்ணாமலை ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இதன்படி திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது தொண்டர்களின் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடியது பாஜக சித்தாந்தத்தில் எந்த ஒருகட்சியும் நமக்கு அருகாமையில்கூட வரமுடியாது. ஏனெனில் உண்ணையான நாட்டுப்பற்றும், தேசியப் பற்றும் இருக்கக்கூடியது நமது கட்சியாகும். இதற்காகத்தான் நம்முடைய கட்சியில் பல தலைவர்கள், தொண்டர்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். நீங்கள் சொல்லலாம் இத்தனை காலமாக பாஜகவுக்கு தமிழகம் தேவைப்பட்டது. ஆனால் இப்பொழுது தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது. திமுக 45 நாள்களுக்கு மேலான ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து நீட் வேண்டாம், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று எதுவுமே வேண்டாம் எங்களைத் தனியாக விட்டு விடுங்கள் என்று திமுக சொல்கிறது. அப்படி இருக்கும்போது திமுக சரியாக ஆட்சி செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

கரோனா தடுப்பூசியை  பிரதமர் மோடி கொடுத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் திமுக கட்சி தொண்டர்கள் டோக்கன் பெற்றுக் கொள்கின்றனர். சாதாரண மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற நிலையில் திமுக குடும்பத்துக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதை மறைப்பதற்காகவே பிரதமர் தடுப்பூசி வழங்கவில்லை என்று பொய்யான கருத்துக்கள் பரப்புகின்றனர். தமிழகத்தில் அடுத்த 4 மாதங்களில் ஒவ்வொரு பொய்யையும் வேரறுப்போம். தமிழக மக்களுக்கு பிரதமர் மோடியின் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களுக்கும் பாஜகவை எடுத்துச் செல்ல வேண்டும். வீடுவீடாக நமது கட்சியின் கொள்கைகளை எடுத்துச்செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகமாகப் பயனடைந்துள்ளது திருப்பூர். முத்ரா திட்டத்தில் இந்திய அளவில் பயனடைந்தவர்களின் பட்டியலில் முதலில் உள்ளது திருப்பூர். இந்தக் கட்சி மட்டும்தான் உண்மையான தொண்டர்கள், தலைவர்களைக் கொண்டுள்ளது. மற்ற கட்சிகளை சொல்ல முடியாது.

ஏனென்றால் குடும்பத்துக்காக ஒரு கட்சி உள்ளது. இந்தக் கட்சியே ஒரு குடும்பமாகும். ஆகவே, அடுத்த 3 ஆண்டுகளுக்கு கடுமையான பணியை மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பொன்.ருத்ரகுமார் மற்றும் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் புதன்கிழமை கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com