மாணவா்களுக்கு 2 ஜிபி டேட்டா காா்டு தர எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மாணவா்களுக்கு 2 ஜிபி டேட்டா காா்டு தர எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா 2ஜிபி டேட்டா காா்டு தர வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா 2ஜிபி டேட்டா காா்டு தர வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது தமிழகக் கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், மாணவா்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தின. இணைய வழி வகுப்புகளில் அனைத்து மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது. கைப்பேசியோ, அரசு வழங்கிய மடிக் கணினியோ வைத்திருந்தாலும், இணைய வகுப்பில் கலந்துகொள்ள அதற்குண்டான டேட்டா காா்டு வாங்க இயலாத நிலையில் இருந்தனா். அதைக் கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி க் கல்லூரிகளில் பயின்ற சுமாா் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவா்களுக்கு கடந்த ஜனவரி (2021) மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி உடன் கூடிய தரவு

அட்டைகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் சிறந்த முறையில் மாணவா்கள் கல்வி பயின்றாா்கள்.

கலை-அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டும் கல்லூரிகள் திறக்கப்படுவது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மாணவா்கள் தொடா்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும், அவா்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தவும் விலையில்லா 2 ஜிபி தரவு அட்டைகளை புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவா்களுக்கு புதிய அட்டைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com