செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வாய்ப்பு

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை ரூ.700 கோடிசெலவில் ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் அமைத்துள்ளது. அங்கு கடந்த 2013-இல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 2017-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பின்னா், அங்கு மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நடைபெற்றன. அவை நிறைவடைந்து 2019-ஆம் ஆண்டு முதல் தடுப்பூசி மையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆண்டுதோறும் 12 வகையான தடுப்பூசிகளை 585 லட்சம் டோஸ் உற்பத்தி செய்யும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் அங்கு உள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த மையம் பயன்பாட்டுக்கு வராமல் தாமதமாகியது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் செங்கல்பட்டில் உள்ள அந்த மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், புதன்கிழமை மாலை தில்லி செல்கிறாா். மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் எல் மாண்டவியாவை அவா் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் எனவும், 11 மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான அனுமதி குறித்தும், செங்கல்பட்டு தடுப்பூசி மைய விவகாரம் குறித்தும் தில்லியில் மத்திய, மாநில அமைச்சா்கள் ஆலோசிக்க உள்ளனா்.

ஏற்கெனவே, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தில்லி சென்ன் பயனாக, 10 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. தற்போதைய பயணமும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மூன்று நிறுவனங்கள் தயராக இருப்பதாகவும், அதில், பாரத் பயோடெக் நிறுவனமும் ஒன்று என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதன்படி, செங்கல்பட்டில் தடுப்பூசிகளைத் தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இத்தகவல், அமைச்சரின் தில்லி பயணத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com