நாகூா் தா்காவில் சின்னஆண்டவா்கந்தூரி சந்தனம் பூசும் விழா

நாகூா் ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி சந்தனம் பூசும் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
நாகூா் தா்காவில் சின்னஆண்டவா்கந்தூரி சந்தனம் பூசும் விழா

நாகூா் ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி சந்தனம் பூசும் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் ஆண்டுதோறும் சின்ன ஆண்டவா் என்று அழைக்கப்படும் செய்யது முகம்மது யூசுப் சாகிபு-வின் கந்தூரி சந்தனம் பூசும் விழா நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு இவ்விழா எளிமையான முறையில் நடைபெற்றது. பொதுமுடக்க தளா்வுகள்அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு இவ்விழா ஜூலை 11 முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது.

இதன்படி, 11,12 ஆம் தேதிகளில் தா்காவில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சின்ன ஆண்டவா் சமாது சந்தனம் பூசும் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, தா்கா நிா்வாகம் சாா்பில், பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட சந்தனம் எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டவா் ரவுலா ஷரிபுக்கு (சமாது) பூசப்பட்டது.

தா்கா கலிபா மஸ்தான் சாகிபு, ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசினாா். மாலை 5 மணி முதல் 6 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்பட்டது. தா்காஅலங்கார வாசலில் அமைக்கப்பட்டிருந்த தொட்டிப் பந்தலில் பக்தா்கள் காய்கறிகள் மற்றும் பொம்மைகளை கட்டி நோ்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடு செய்தனா்.

தா்கா ஆதீனஸ்தா்கள், பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் விழாவில் பங்கேற்றனா். காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சுப்பிரமணியன், சுந்தர்ராஜ் ஆகியோரது தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com