சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பேரூராட்சி பூங்காவில் காமராஜர் பிறந்தநாள் விழா 

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம், அக்கமாபேட்டை அமுதச்சுடர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா
அக்கமாபேட்டை பேரூராட்சி பூங்காவில்  மரக்கன்றுகள் நடும் பணியினை வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறார் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் உடன் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.பாலசுப்ரமணி.
அக்கமாபேட்டை பேரூராட்சி பூங்காவில்  மரக்கன்றுகள் நடும் பணியினை வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறார் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் உடன் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.பாலசுப்ரமணி.


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம், அக்கமாபேட்டை அமுதச்சுடர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா அக்கமாபேட்டை பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி வட்டாட்சியர் கோ.வேடியப்பன் இவ்விழாவிற்கு தலைமை வகித்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பூங்கா வளாகத்தில்  மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகள் நடும் பணியினை தொடக்கி வைத்தும் அப்பூங்காவிற்கு காமராஜர் என்ற பெயர் சூட்டிப் பேசியது,  நமது நாட்டில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதி இருக்க வேண்டும். மரங்கள் நட்டு வைப்பதன் மூலம் மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்கள் கிடைக்கின்றன. அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் கரோனா தொற்று காலத்தில் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வருவது பாராட்டுக்குரியது. மரங்களை நட்டு வைப்பதோடு இல்லாமல் அதனைத் தொடர்நது பேணி காத்து வளர்த்து வர வேண்டும்.  சங்ககிரியை பொருத்தவரையில் லாரி தொழிலைச் சார்ந்து பல்வேறு தொழில்கள் உள்ளன. அதில் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். சங்ககிரியில் கரோனா தொற்றால் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. பின்னர் வருவாய்த்துறை நிர்வாகத்தின் முயற்சியால் பல்வேறு தொழிலதிபர்களின் உதவியோடு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு 80 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது அதனையடுத்து இறப்பு வகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் முழுவதும் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் காமராஜரின் நேர்மையான நிர்வாகம், எளிமையான வாழ்க்கை, கல்வி கொள்கைகள் தான் இன்று  நமது நாட்டில் பல்வேறு அறிஞர்களை உருவாக்கி உள்ளது. எனவே இன்றைய இளைஞர்கள் காமராஜரின் வாழ்கையை பின்பற்றி பொதுவாழ்வில் தூய்மையை கடைபிடித்து மக்களுக்கு சேவை ஆற்றவேண்டும் என்றார். 

பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.பாலசுப்ரமணி, துப்பரவு ஆய்வாளர் லோகநாதன்,  உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் வேல்முருகன் ஆகியோர் பேசினர்.  முன்னதாக அமுதச்சுடர் அறக்கட்டளைத் தலைவர் வெ.சத்தியபிரகாஸ் வரவேற்றார். 

பேரூராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் அழகப்பன், ஓய்வுப்பெற்ற ஆசிரியர் முனியப்பன், அறக்கட்டளை பொருளாளர் வி.நிர்மலா, நிர்வாகிகள் ஹரிஹரன், சிவபாலா, வெற்றிவேந்தன், பிரசாத், நவீன்குமார், நவீன், ஜனார்த்தனன், கௌதம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.  விழாவில் அமுதச்சுடர் அறக்கட்டளையின் சார்பில் நாவல், வேம்பு,  அரசன் உள்ளிட்ட பல்வேறு வகையான 25க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பூங்கா வளாகத்தில்  நட்டு வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com