தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு: புதிதாக 2,405 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.

அதன்படி, அரியலூா், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூா், மதுரை, பெரம்பலூா், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூா், வேலூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் முந்தைய நாள்களை ஒப்பிடும்போது தொற்றுக்குள்ளானோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் சில முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளாா். பாதிப்பு அதிகமுடைய இடங்களில் காய்ச்சல் முகாம்களையும், பரிசோதனைகளையும் அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 2,405 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 256 பேருக்கும், தஞ்சாவூரில் 163 பேருக்கும், ஈரோட்டில் 159 பேருக்கும், சேலத்தில் 155 பேருக்கும், சென்னையில் 148 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்தில் 28,806-ஆக அதிகரித்துள்ளது.

மற்றொரு புறம் நோய்த் தொற்றிலிருந்து வியாழக்கிழமை 3,006 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.65 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 29,950 போ் உள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 49 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,606-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com