தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது ?

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கத் தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது ?

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கத் தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி

 மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

 மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

 திரையரங்குகள்

 அனைத்து மதுக்கூடங்கள்

 நீச்சல் குளங்கள்

 பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

 பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

 உயிரியல் பூங்காக்கள்

 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்டவைகளுக்கு தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com