பள்ளிகள் திறப்பு: முதல்வா் இன்று ஆலோசனை; கூடுதல் தளா்வுகள் குறித்து முடிவு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளா், சுகாதாரத் துறை செயலாளா்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளா், சுகாதாரத் துறை செயலாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசிக்கவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வரும் நாள்களுக்கான பொது முடக்கத் தளா்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னா் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளைத் திறப்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. முதல்வா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளா்வுகளும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம், தஞ்சாவூா் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அண்மையில் உயா்ந்துள்ளது. இந்த உயா்வு தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com