சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு

சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  
சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு

சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று எம்.ஆர்.சி.நகர், நகர நிர்வாக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களிடம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு 727.67 கன அடி நீர் வரத்தும், ஏரிகளில் 7288 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 851 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தற்பொழுதுள்ள நீர்இருப்பினைக் கொண்டு குடிநீர் பிரச்சனை ஏதும் இன்றி டிசம்பர் 2021 வரை குடிநீர் விநியோகம் செய்யப்படும். 100 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.914.42 கோடி மதிப்பில் கடந்த 23.02.2010 அன்று அப்போதைய துணை முதல்வரின் தற்போதைய முதல்வரின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
ரூ.1259.38 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை எதிர்மறை சவ்வூடு முறையில் குடிநீராக்கும் திட்டப்பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஏப்ரல் 2023க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் சுமார் ஒன்பது இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், பேரூரில், ரூ.6078 கோடி மதிப்பீட்டில், 400 எம்.எல்.டி. உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் டிசம்பர் 2025க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 22 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கழிவுநீர் குழாயில் தூர் வாரும் பணிகள் போர்கால அப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைகாலத்திற்கு முன்னர் மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை பொதுமக்களிடம் விவரித்து கட்டமைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தி மழைநீர் வீணாகாமல் கடலில் சென்று கலப்பதை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள 200 பணிமனைகளிலும் ஒரே சமயத்தில் இலவச குடிநீர் தர பரிசோதனை 10 நாட்களுக்கு முடிக்குமாறும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள கிணற்று நீர், ஆழ்துளை கிணற்று நீர் மற்றும் சென்னைக் குடிநீரினை பரிசோதனை செய்து பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com