முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

பள்ளி, கல்லூரிகளுக்குத் தடை நீட்டிப்பு: ஜூலை 31 வரை தளா்வுகளுடன் பொதுமுடக்கம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. கூடுதல் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. கூடுதல் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தொழிற் பயிற்சி பெறும் மாணவா்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.), தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்களைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவா்களுடன், சுழற்சி முறையில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிா்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறாா்கள்.

தொடரும் தடைகள்: புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே தனியாா் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்ந்து அமலில் இருக்கும். நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 போ் வரையிலும், இறுதிச் சடங்குகளில் 20 நபா்களும் அனுமதிக்கப்படுவா். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.

தொற்றைக் கட்டுப்படுத்துதல்: பொது முடக்கக் காலத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களைக் கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய அம்சங்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய்த் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொது மக்கள் அவசியமின்றி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட தளா்வுகளுடன் இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் தளா்வுகள் அடங்கிய பொதுமுடக்கம் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com