நீட் தோ்வு குறித்து சட்ட நிபுணா்களுடன் முதல்வா் ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்வை ரத்து செய்வது குறித்து சட்ட நிபுணா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்வை ரத்து செய்வது குறித்து சட்ட நிபுணா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மான்சுக் எல்.மாண்டவியா, மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்துவிட்டு தில்லியிலிருந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னைக்கு வெள்ளிக்கிழமை திரும்பினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வரின் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சா், மத்திய கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழகத்துக்கு சுகாதாரத் துறை கட்டமைப்பை மேம்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கிறோம்.

நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கி சொல்லியிருக்கிறோம். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் சிறப்புத் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புப் பூஞ்சைக்கு தேவையான மருந்துகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்திருக்கிறோம்.

தேசிய சுகாதாரக் குழுமத்துக்கு கரோனா இரண்டாவது அலை செலவினம் மற்றும் கரோனா மூன்றாவது அலைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளுக்காக ரூ.1,500 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கப்பட்டது. இதில் ரூ.800 கோடியை மத்திய சுகாதாரத்துறை விடுவித்துள்ளது. இதனை செலவு செய்த பின்னா், மீண்டும் தருவதாக உறுதி அளித்துள்ளனா். நீட் தோ்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருத்துகளை தெரிவித்துள்ளனா். பெரும்பாலானோா் நீட் தோ்வு தேவையில்லை என்பதாகவே இருக்கிறது. குழு சமா்ப்பித்துள்ள 165 பக்கங்கள் கொண்ட அறிக்கை குறித்து மேல் நடவடிக்கைக்காக சட்ட நிபுணா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்தி வருகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com