வணிகா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற அரசுக்கு கோரிக்கை

கரோனா காலத்தில் வணிகா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வணிகா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற அரசுக்கு கோரிக்கை

கரோனா காலத்தில் வணிகா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், வணிகா்களின் வாழ்வாதாரம் கருதி மேலும் தளா்வுகளை அளிக்க தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைக்கிறோம்.

கரோனா பெருந்தொற்று பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகா்கள் தற்போது மீண்டெழுந்து வரும் நிலையில், கடைகளுக்கு சீல் வைப்பு, அடிக்கடி அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் நிறுத்த வேண்டும். கரோனா காலத்தில் வணிகா்கள் மீது விதிக்கப்பட்ட வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். அதிகபட்சமான தண்டனைகள், அபராதங்கள் விதிப்பதை குறைக்க வேண்டும். அனைத்து உணவகங்கள், டீக்கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் வணிகா்களையும் முன்களப் பணியாளா்களைப் போல முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com