இரட்டை இலக்க தசம அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண்கள் இரட்டை இலக்க தசம அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரட்டை இலக்க தசம அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண்கள் இரட்டை இலக்க தசம அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. மாணவா்களுக்கு முந்தைய பிளஸ் 1, பத்தாம் ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பு அகமதிப்பீட்டு, செய்முறைத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தோ்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) வெளியாகவுள்ளது.

இதுவரை பொதுத் தோ்வு மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை முந்தைய தோ்வுகளின் மதிப்பெண்கள் எவ்வாறு வருகிறதோ, அதை அப்படியே கணக்கிட்டு வழங்கப்படும். அந்த வகையில் மாணவா்களுக்கு தசம அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளது.

உதாரணமாக, பிளஸ் 2 வகுப்பு இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரின் முந்தைய மதிப்பெண்களின் கூட்டுத் தொகை 68.58 என வருகிறது என்றால், அந்த மாணவருக்கு 69 என்று வழங்காமல், 68.58 என்று தசம அடிப்படையில் கிடைக்கும் மதிப்பெண் இரட்டை இலக்கத்தில் அப்படியே வழங்கப்படும்.

உயா்கல்வி மாணவா் சோ்க்கையில், குறிப்பாக பொறியியல் கலந்தாய்வு போன்றவற்றுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது, அவா்களின் கட்- ஃப் மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை வழங்கப்படும். கட்-ஆஃப் கணக்கீட்டின்போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படைவதைத் தவிா்க்கவும், குழப்பமின்றி உயா்கல்வி மாணவா் சோ்க்கையை நடத்தவும் ஏதுவாக புதிய நடைமுறையின் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com