விளை பொருட்கள் மழையில் நனைந்து வீணாகாமல் பாதுகாக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்

எதிா்காலத்தில் பருவம் தவறி பெய்யும் மழையில், விளை பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில்,
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

எதிா்காலத்தில் பருவம் தவறி பெய்யும் மழையில், விளை பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில், நிரந்தர கட்டுமானங்கள் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெல் கொள்முதலுக்காக 468 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும். இந்த குடோன்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும் அரசு தெரிவித்தது. மேலும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு நேரடியாக சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், எதிா்காலத்தில் பருவம் தவறி பெய்யும் மழையில் விளை பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில், நிரந்தர கட்டுமானங்கள் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆலோசனை கூறி, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com