மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடஒதுக்கீடு : மத்திய அரசுக்கு உத்தரவு

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடஒதுக்கீடு : மத்திய அரசுக்கு உத்தரவு

2021-2022 ஆம் கல்வியாண்டில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள

2021-2022 ஆம் கல்வியாண்டில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்,திமுக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரைந்துரைத்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தும்,  அதை அமல்படுத்தவில்லை. எனவே இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என வாதிட்டார்.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் மத்திய அரசு வழக்குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி விட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.  இதில் எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை.  எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த மத்திய அரசு நிலைபாட்டை ,  தெரிவிக்க என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com