கும்மிடிப்பூண்டியில் குழந்தைகளுக்கான பிசிவி தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நியூமோகாக்கல் கான்ஜூகேட் எனப்படும் பிசிவி தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் குழந்தைகளுக்கான பிசிவி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் குழந்தைகளுக்கான பிசிவி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நியூமோகாக்கல் கான்ஜூகேட் எனப்படும் பிசிவி தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் அறிவுறுத்தலின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறை ஏற்பாட்டில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நியூமோகாக்கல் கான்ஜுகேட் எனப்படும் பி.சி.வி தடுப்பூசி போடும் பணி கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு வட்டாட்சியர் ந.மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம்,ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலைலை, கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜஜீன் ஜெனீதா,வட்டார சுகாதார கண்காணிப்பாளர் முருகதாஸ்,   வட்டார சுகாதார ஆய்வாளர் சுகுமார், சமுதாய சுகாதார செவிலியர் சாந்தி, பகுதி சுகாதார செவிலியர் ராணி முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்குகையில், பிசிவி தடுப்பூசி போட தனியார் மருத்துவமனைகள் 6 ஆயிரம் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்வில் பேசிய வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் கூறுகையில், நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பசி எனப்படும் பிசிவி தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலையில் இந்த தடுப்பூசியின் முதல் தவணை ஒன்றரை மாத குழந்தைகளுக்கும், இரண்டாம் தவணை மூன்றரை மாதத்திலும், ஊக்குவிப்பு தவணை 9 மாதத்திலும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் கும்மிடிப்பூண்டியில் ஒன்றரை மாத 76 குழந்தைகளுக்கு கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், ஈகுவார்பாளையம், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com