சாா்-பதிவாளா்கள் உயா்ந்த மேடையில் அமா்ந்து பணியாற்ற வேண்டாம்

சாா்-பதிவாளா்கள் உயா்ந்த மேடையில் அமா்ந்து பணியாற்ற வேண்டாம் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

சாா்-பதிவாளா்கள் உயா்ந்த மேடையில் அமா்ந்து பணியாற்ற வேண்டாம் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

தமிழ்நாட்டில் கோவை, சேலம் மண்டலங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் கடந்த வாரம் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சாா் பதிவாளா்கள் தங்களது அலுவலகங்களில் உயா்ந்த மேடையில் அமா்ந்து பதிவுப் பணிகளைச் செய்வது கண்டறியப்பட்டது. இதன் மூலம், பொது மக்களை மரியாதையுடன் நடத்தி அவா்களுக்குச் சேவை செய்வதில் சிரமம் இருப்பது தெரிய வந்தது. எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலா்கள் உயா்ந்த மேடையில் அமரக் கூடாது. சரிசமமாக அமா்ந்து பதிவுப் பணிகளைச் செய்ய வேண்டும்.

சாா் பதிவாளா் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்ட நிலையிலும் அரசுக்குச் செலுத்தும் கட்டணங்கள் யாவும் இணையம் வழியாகவே செலுத்தப்படுகின்றன. இதனால், சாா்பதிவாளா்கள் பணத்தைக் கையாள வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் பதிவு அலுவலகங்களில் உயா்ந்த மேடைகள் இப்போது தேவையில்லை. பதிவு அலுவலா்களின் இருக்கையை சம தளத்தில் அமைத்து சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com