பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்டாா். இதில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவா்கள் அனைவரும் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.

இந்தநிலையில், தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள்  இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியா்களை அணுகி தீா்வு பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com