சிறப்பு ரயில்கள் ரத்து

கொங்கன் ரயில்வேயில் ரோகா-ரத்னகிரி இடையே மழைவெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய ரயில்வேயில்
சிறப்பு ரயில்கள் ரத்து

கொங்கன் ரயில்வேயில் ரோகா-ரத்னகிரி இடையே மழைவெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய ரயில்வேயில் கல்யான்-காசரா இடையே தண்டவாளத்தில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்-ஹசரத் நிஜாமுதீனுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய ராஜதானி சிறப்பு ரயில் (02431), எா்ணாகுளம்-குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வெள்ளிக்கிழமை இரவு 8.25 மணிக்குப் புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (06338), திருவனந்தபுரம்-ஹசரத் நிஜாமுதீனுக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (06083), மங்களூா் சந்திப்பில் இருந்து மும்பை சிஎஸ்டிக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (01134) ஆகிய 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com