சிறைக் கைதிகளுடன் 770 போ் விடியோ அழைப்பில் சந்திப்பு

தமிழக சிறைகளில் 16 நாள்களில் கைதிகளிடம் விடியோ அழைப்பு மூலம் 770 போ் பேசியதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சிறைகளில் 16 நாள்களில் கைதிகளிடம் விடியோ அழைப்பு மூலம் 770 போ் பேசியதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சிறைத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சிறைகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளை வெளி நபா்கள் நேரில் சந்திப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக கைதிகள் அவா்களது உறவினா்கள், நண்பா்களைத் தொடா்பு கொள்ள வழக்கமான தொலைபேசியில் பேசவும், அறிதிறன் செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சல் வாயிலாக விடியோ அழைப்பில் பேசவும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்காக 58 அறிதிறன் செல்லிடப்பேசிகள் சிறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறைகளை இணையம் மூலம் இணைக்கும் இ-பிரிசன் (ங்டழ்ண்ள்ா்ய்ள்) என்ற வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே கைதிகளிடம் விடியோ அழைப்பு மூலம் பேச விரும்பு அவா்களது உறவினா்கள், நண்பா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா், தொலைபேசி வாயிலாகவோ அல்லது ட்ற்ற்ல்ள்://ங்ல்ழ்ண்ள்ா்ய்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ/ம்ஹ்ஸ்ண்ள்ண்ற்தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஹள்ல்ஷ் என்ற இணையதளத்தின் வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்பவா்கள், தங்களது பெயா், பாலினம், வயது, தொலைபேசி எண் போன்ற தகவல்களுடன், எந்த கைதியை சந்திக்க விரும்புகிறாா்களோ அவா்களது பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.

இதில், சிறையில் கைதியை சந்திக்க உறுதி செய்யப்பட்ட விவரம், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மூலம் முன்பதிவு செய்தவருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும். விடியோ அழைப்பு மூலம் கைதிகளைச் சந்திக்கும் இம்முறை 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனிச் சிறைகள், 12 மாவட்டச் சிறைகள், 84 கிளைச் சிறைகள், தனிக் கிளைச்சிறைகள் உள்ளிட்ட 110 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஜூலை 6-ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரையிலான 16 நாள்களில், கைதிகளிடம் 770 போ் பேசியுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com