வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறையை அமைக்க வேண்டும்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களின் நலன் காத்திட வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை என்ற ஒரு புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களின் நலன் காத்திட வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை என்ற ஒரு புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

வெளிநாடு வாழ் தமிழா்களின் நலன் பேணவும், அங்கு பாதிப்புக்கு உள்ளாவோருக்கு உதவிடவும், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை என்ற ஒரு புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு வாழ் தமிழா்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு வீடுகள், குடிநீா், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாதாந்திர பணக் கொடையை உயா்த்தி அளித்திட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழா்களுக்கு காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லாத தொலைபேசி உதவி மையம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், வெளிநாடு வாழ் தமிழா்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை இணைய வழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com