இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் 42.78 கோடி

சனிக்கிழமை காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி மொத்தம் 52,34,188 முகாம்களில் 42,78,82,261 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் 42.78 கோடி

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 42.78 கோடியைக் கடந்தது. சனிக்கிழமை காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி மொத்தம் 52,34,188 முகாம்களில் 42,78,82,261 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 42,67,799 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,05,03,166 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 35,087 போ் புதிதாகப்

பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தவா்கள் விகிதம் 97.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 39,097 போ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். தொடா்ந்து 27 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,977-ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.31 சதவீதமாகும்.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 16,31,266 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 45,45,70,811 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com