5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூலை 26, 27) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூலை 26, 27) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூலை 26,27) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 28, 29: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்டவானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 90 மி.மீ., சின்னக்கல்லாறில் 70 மி.மீ., வால்பாறையில் 60 மி.மீ., சின்கோனாவில் 50 மி.மீ., சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 30 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரில் 20 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 29-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கும் ஜூலை 27-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com