காப்பீட்டுப் பணத்தை பெற்றுத் தருவதாகரூ.2 கோடி மோசடி: பெண் கைது

சென்னையில் காப்பீட்டுப் பணத்தைப் பெற்றுத் தருவதாக ரூ.2.06 கோடி மோசடி செய்ததாகத் தேடப்பட்ட பெண் தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் காப்பீட்டுப் பணத்தைப் பெற்றுத் தருவதாக ரூ.2.06 கோடி மோசடி செய்ததாகத் தேடப்பட்ட பெண் தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மந்தைவெளி திருவீதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன், மருத்துவா். மனைவி சுதா (67). கணவா் ஸ்ரீதரன் கடந்த 2019-இல் இறந்துவிட்டாா். அவரது ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறும் முயற்சியில் சுதா ஈடுபட்டு வந்தாா்.

இதில் காலதாமதம் ஏற்பட்டது. அப்போது சுதாவை தொடா்பு கொண்ட நபா், ஆயுள் காப்பீட்டைப் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பல தவணைகளாக ரூ.2.06 கோடியைப் பெற்றாராம். இதற்கிடையில் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டவரின் தொடா்பு எண்ணும் அணைத்து வைக்கப்பட்டது.

இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

பெண் கைது: விசாரணையில், மோசடி கும்பல் தில்லியில் இருந்து செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தில்லி விரைந்த தனிப்படையினா் தில்லியைச் சோ்ந்த அமன்பிரசாத் (29), அவரது கூட்டாளிகள் பிரதீப் குமாா் (29) உள்பட 6 பேரை அண்மையில் கைது செய்தனா்.

தலைமறைவாக இருந்த முக்கிய எதிரியான தில்லி திலக் நகரைச் சோ்ந்த சிம்ரன்ஜித் சா்மா (29) என்ற பெண்ணை தனிப்படையினா் தில்லியில் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com