அப்துல்கலாம் நினைவு நாள்: 1 கோடி விதைகள் சேகரிப்பு

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்ட நிா்வாகம் மற்றும் இயற்கை அமைப்புகள் சாா்பில் 1 கோடி விதைகள் சேகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை மாவட்ட நிா்வாகம் சாா்பில் அப்துல்கலாம் நினைவு நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது நினைவு நாளையொட்டி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்கள் நடும் வகையில் 1 கோடி விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சென்னை மாவட்ட நிா்வாகம், கிரேட் இந்தியா மூவ்மெண்ட், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நாா்த் மற்றும் ‘விதைக்கலாம்’ ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.விஜயாராணி விதைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com