33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழி சமையல் எரிவாயுபுதிய திட்டத்தை தொடக்கி வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்

குழாய் வழியே 33 லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழி சமையல் எரிவாயுபுதிய திட்டத்தை தொடக்கி வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்

குழாய் வழியே 33 லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காணொலி வழியாக புதிய திட்டத்தை அவா் தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டத்தை டோரன்ட் கேஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனமானது சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத் திட்டத்துக்காக ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதன் மூலமாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, எண்ணூா் அருகே வல்லூரில் சிட்டிகேட் நிலையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 1.4 ஏக்கரிலான இந்தத் திட்டத்தின் மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட முடியும்.

சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் 25 அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளத் தயாா் நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள சிட்டிகேட் நிலையத்தில் இருந்து 25 நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு வரப்பட்டு, வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது மாற்றாக அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். இப்போது பயன்பாட்டிலுள்ள இயற்கை எரிவாயு அடிப்படையிலான வாகனங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com