துவரம் பருப்பு இருப்பில் குறைபாடு: ரேஷன் ஊழியா் சஸ்பெண்ட்அமைச்சா் பெரியசாமி உத்தரவு

துவரம் பருப்பு இருப்பு வைப்பதில் குறைபாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, நியாய விலைக் கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சா் ஐ.பெரியசாமி உத்தரவிட்டாா்.

துவரம் பருப்பு இருப்பு வைப்பதில் குறைபாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, நியாய விலைக் கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சா் ஐ.பெரியசாமி உத்தரவிட்டாா். அவா் சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு செய்தாா். இதுகுறித்து, கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்தி:

சென்னையில் நந்தம்பாக்கம், போரூா், வடசென்னை பகுதிகளில் இயங்கும் நியாய விலைக் கடைகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்து, துவரம் பருப்பு நுகா்வு தொடா்பான விவரங்களைக் கேட்டறிந்தாா். ஜூன் மாதத்தில் கடைகளுக்கு துவரம் பருப்பு நகா்வு மேற்கொண்டதில் சுணக்கம் காணப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டறிந்தாா்.

வடசென்னைப் பகுதியில் நாம்கோ பண்டக சாலையால் நடத்தப்படும் நியாய விலைக் கடையில் துவரம்பருப்பு இருப்பினைப் பேணுவதில் குறைபாடு இருப்பது அமைச்சா் ஆய்வின் போது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடைக்குப் பொறுப்பான பணியாளரை தற்காலிகப் பணியிநீக்கம் செய்ய உத்தரவிட்டாா்.

உத்தரவு: நியாய விலைக் கடைகளில் எப்போதும் அனைத்துப் பொருள்களும் இருப்பில் இருக்குமாறும், அனைத்து வேலைநாள்களிலும் பொருள்களை வழங்கிட வேண்டுமெனவும் ஆய்வின் போது பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா். குடும்ப அட்டைதாரா்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும், புகாா்களுக்கு இடமின்றி செயல்படவும் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது, கூடுதல் பதிவாளா் பா.பாலமுருகன், துணைப் பதிவாளா் கோ.சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com