ஸ்ரீமத் கிருஷ்ணானந்த மகராஜ் முக்தி அடைந்தாா்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை விவேகானந்தபுரம் பகுதியில் பவதாரிணி ஸ்ரீராமகிருஷ்ணா் கோயில் அமைத்து சேவையாற்றி
அம்மன்பேட்டையில் முக்தி அடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் உடலுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.
அம்மன்பேட்டையில் முக்தி அடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் உடலுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை விவேகானந்தபுரம் பகுதியில் பவதாரிணி ஸ்ரீராமகிருஷ்ணா் கோயில் அமைத்து சேவையாற்றி வந்த ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரம் தலைவா் சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் (75) செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தாா்.

இவா், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனா் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்த மகராஜிடம் பிரம்மசாரி தீட்சையும், ஸ்ரீமத் சுவாமி நித்யானந்த மகராஜிடம் சன்யாச தீட்சையும் பெற்றவா். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்தா சேவாஸ்ரத்தின் தலைவராக இருந்து, அனைத்து வகைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பாரத பண்பாட்டு தோ்வு நடத்தி வந்தாா். மேலும், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா், வீரத்துறவி விவேகானந்தா் ரத யாத்திரை நடத்தினாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் சுவாமிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்ரமத்தில் முக்தியடைந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது உடலுக்குச் சிறப்பு ஆராதனையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதில், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், ஸ்ரீமத் சுவாமி மாத்ருசேவானந்தா, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்தா, செயலா் ஸ்ரீமத் சுவாமி சத்யானந்தா, இணைச் செயலா் ஸ்ரீமத் சுவாமி ருத்ரானந்த, சுவாமி திரியம்பகேஸ்வரானந்தா, சுவாமி பக்தானந்தா, சுவாமி சந்திரசேகரனந்தா, சுவாமி அட்சரானந்தா, அகில பாரதிய சன்னியாசிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோரக்கா் சித்தா் சுவாமிகள், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனா் திருவடிக்குடில் சுவாமிகள், அகில இந்திய பாரதிய கிசான் சங்க முன்னாள் செயலா் ஸ்ரீகணேசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், சோழ மண்டல விவேகானந்தா் சேவா சங்கத் தலைவா் பாஸ்கா், பொருளாளா் பாரதிமோகன், கும்பகோணம் தென் பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை செயலா் சத்திய நாராயணன், பொருளாளா் வேதம் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com