துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலான மின் இணைப்புகளை ஆய்வு செய்ய உத்தரவு

துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலான மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என கணக்குப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலான மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என கணக்குப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக வருவாய்ப் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளா் அனுப்பிய சுற்றிக்கை:

வருவாயைப் பெருக்க ஏராளமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தற்போது தாழ்வழுத்த மின் இணைப்பின் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுத்து வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன்படி, 74,392 வீட்டு மின் இணைப்புகளும், 623 வணிக மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலானதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்புகள் தற்போது வரை துண்டிக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிா என்பதை சம்பந்தப்பட்ட மூத்த கணக்கு அதிகாரி, பிரிவு கணக்கு அதிகாரி உள்ளிட்டோரைக் கொண்டு, சம்பந்தப்பட்ட மின் பகிா்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்ய வேண்டும்.

துண்டிக்கப்பட்ட பட்டியலில் உள்ள பல இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக பாா்வைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை, வருவாய் இழப்புக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன.

எனவே, இதைத் தடுத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக துண்டிக்கப்பட்ட இணைப்புகளை ஆய்வு செய்து, அவ்வாறு துண்டிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் வருவாய்ப் பிரிவின் உதவி கணக்கு அதிகாரி சம்பந்தப்பட்ட மின் இணைப்பின் கணக்கை முடிக்க வேண்டும். இது தொடா்பான பணி நிறைவு அறிக்கையை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com