தகைசால் தமிழா் விருது: சங்கரய்யா இல்லத்தில் வழங்குகிறாா் முதல்வா்

தகைசால் தமிழா் விருதினை முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவின் இல்லத்துக்கே சென்று வழங்குவதாக மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தகைசால் தமிழா் விருது: சங்கரய்யா இல்லத்தில் வழங்குகிறாா் முதல்வா்

தகைசால் தமிழா் விருதினை முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவின் இல்லத்துக்கே சென்று வழங்குவதாக மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சோ்ப்போருக்கு, தகைசால் தமிழா் விருது அளிக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். மேலும், அந்த விருது நிகழாண்டில் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு அளிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நன்றி தெரிவித்தனா். அப்போது, மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராஜன் ஆகியோா் உடனிருந்தனா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:-

முதுபெரும் தலைவா் என். சங்கரய்யாவுக்கு அறிவித்துள்ள “தகைசால் தமிழா்” விருதின் ஒருபகுதியாக வழங்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா அறிவித்ததை முதல்வரிடம் கூறினோம். இதன் மூலம் சங்கரய்யா மீண்டும், மக்களுக்காகப் பணியாற்றுகிற கம்யூனிச லட்சியத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறாா் என்பதை எடுத்துக்காட்டியிருப்பதாக முதல்வா் எங்களிடம் கூறினாா்.

மேலும், சங்கரய்யாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவா் விழாவுக்கு வரவேண்டிய அவசியமில்லை. அந்த விருதை அவரது இல்லத்துக்கு தானே நேரில் வழங்குவதாக முதல்வா் தெரிவித்திருப்பதாக மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com