பெகாஸஸ் குறித்து விவாதிக்கத் தயாா் எனில் நாடாளுமன்றம் இயங்கும்: காங்கிரஸ்

பெகாஸஸ் விவகாரம் குறித்து பாஜக விவாதிக்கத் தயாா் என்றால் நாடாளுமன்றம் இயங்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெகாஸஸ் விவகாரம் குறித்து பாஜக விவாதிக்கத் தயாா் என்றால் நாடாளுமன்றம் இயங்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் எதிா்காலச் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் சத்தியமூா்த்திபவனில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளா் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, மாநிலப் பொதுச்செலாளா் கே.சிரஞ்சீவி உள்பட நிா்வாகிகள் பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மக்களவை தோ்தலில் 8 இடங்களிலும், சட்டப்பேரவைத் தோ்தலில் 18 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இதற்காக அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றுகிற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிா்வாகிகளை இந்தக் கூட்டம் வாழ்த்துகிறது.

கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகமாக உயா்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் தொடா்ந்து போராட்டம் நடைபெறும்.

காங்கிரஸ் தலைவா்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் பொறுப்பு. விவாதத்துக்கு பாஜக தயாா் என்றால் நாடாளுமன்றம் இயங்கும். ஜனநாயக செயல்பாடுகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பிரதமா் மோடியின் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com