பேரையூரில் ஊரடங்கை மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி 

மதுரை மாவட்டம் பேரையூரில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியை காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் துவக்கி வைத்தார்.
பேரையூர் முக்கு சாலையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்
பேரையூர் முக்கு சாலையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூரில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியை காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் துவக்கி வைத்தார்.

பேரையூரில் கரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் அனுமதியின்றி வாகனங்களில் பலர் சுற்றித் திரிகின்றனர். இவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கேமராவை பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் இயக்கி துவக்கி வைத்தார்.

பேரையூர் பேருந்து நிலையம், உசிலம்பட்டி சாலை, டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம், மெயின்பஜார், காய்கறி மார்கெட், திருமங்கலம் சாலை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வை டி.எஸ்.பி. மதியழகன் வழங்கினார். சார்பு ஆய்வாளர் மகேந்திரன்,சேகர், உதயசூரியன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com