ஜி.எஸ்.டி. கவுன்சில் அரட்டை அரங்கமாக மாறிவிட்டது: ப.சிதம்பரம் விமர்சனம்

ஜிஎஸ்டி கவுன்சில் அரட்டையடிக்கும் அரங்கமாக மாறிவிட்டதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்


ஜிஎஸ்டி கவுன்சில் அரட்டையடிக்கும் அரங்கமாக மாறிவிட்டதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ஜி.எஸ்.டி.யை புரிந்து கொள்ள 10 வழிகாட்டுதல் என தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், நல்ல சிந்தனையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. தொடங்கப்பட்டது எனவும், பாஜக அதனை தவறான சட்டமாக மாற்றிவிட்டது என்றும் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், ஒவ்வொரு தொழிலதிபரும் வரி ஏய்ப்பு செய்பவர் என சந்தேகிக்கப்பட்டது, ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தும் (அதிகாரிகள் அடங்கிய) குழுவானாது, நாய் ஆட்டும் வால் போல் ஆகிவிட்டதாகவும், என்.டி.ஏ மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளின் விரிவாக்கமாகக் கருதப்படுகிறது, ஜி.எஸ்.டி.யின் சாரம்சமே புதைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com