புதிய குடிநீர் திட்டப்பணிக்கான முதற்கட்டப்பணிகள் தீவிரம்

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பகுதியில், அமைந்துள்ள காவிரிக்கதவணை நீர்த்தேக்கப்பகுதியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கானமுற்கட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
புதிய குடிநீர் திட்டப்பணிக்கான முதற்கட்டப்பணிகள் தீவிரம்


எடப்பாடி: சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பகுதியில், அமைந்துள்ள காவிரிக்கதவணை நீர்த்தேக்கப்பகுதியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான
முதற்கட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.

தமிழக அரசு சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, இடகணசாலை, பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூர் உள்ளிட்ட ஐந்து பேரூராட்சிகளுக்கு உட்பட்ட, 634 குடியிருப்புகளுக்கு,  காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட பேரூராட்சிப்பகுதி குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் வகையிலான,  புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அண்மையில் அனுமதி அளித்துள்ளது.  

இப்புதிய குடிநீர் திட்டத்திற்கான நீர் உந்து நிலையம் அமைத்திடும் நோக்கில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மோளப்பாறை அருகே, புதிய குடிநீர் திட்டத்திற்க்கான நீர் உந்து நிலையம் அமைத்திடும் பணியில் குடிநீர்; வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது பொது முடக்கம் அமலில் உள்ள நிலையிலும், இப்பகுதியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான, ஆரம்பகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

முதற்கட்டமாக, காவிரிக்கதவணை ஒட்டிய பகுதியில், நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கனரக எந்திரங்களை கொண்டு,
நீர் உந்து நிலையத்திற்கு காவிரிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், நீர் வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, நீர் உந்து நிலையம் மற்றும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய்கள் வழியாக சமந்தப்பட்ட பேரூராட்சிப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படும் எனவும், பொது முடக்கதால், இப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என சமந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com