சங்ககிரி புதிய எடப்பாடி சாலையின் மையப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் திறப்பு வால்வு
சங்ககிரி புதிய எடப்பாடி சாலையின் மையப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் திறப்பு வால்வு

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையின் மையப்பகுதியில் இருந்த குடிநீர் குழாய் வால்வு வேறு இடத்தில் அமைக்கும் பணி: முதல்வருக்கு மக்கள் நன்றி 

பொதுமக்களின் கோரிக்கையினையடுத்து வால்வினை மாற்று இடத்தில் அமைப்பதற்கான பணிகள் சனிக்கிழை நடைபெற்று வருகின்றன. ஊர் பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். 

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட வார்டு பகுதிகளுக்கு காவேரி ஆற்று குடிநீர் திறந்து விடும் வால்வு புதிய எடப்பாடி சாலையின் மையப்பகுதியில் கடந்த சில வருடங்களாக இருந்து வந்தது. அக்குழியில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாகி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையினையடுத்து வால்வினை மாற்று இடத்தில் அமைப்பதற்கான பணிகள் சனிக்கிழை நடைபெற்று வருகின்றன. ஊர் பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட வார்டு பகுதிகளுக்கு காவேரி ஆற்று குடிநீர் விநியோகம் செய்யும் வால்வு கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய எடப்பாடி சாலையில் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் போது அவ்வால்வு சாலையின் மையப்பகுதிக்கு சென்று விட்டது. சாலையில் வால்வு உள்ள பகுதி குழியாக இருந்ததால் சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய எடப்பாடி சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பகல், இரவு நேரங்களில் அக்குழி இருக்கும் இடம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயமடைந்து கிச்சை பெற்று வந்துள்ளனர். 

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையின் மையப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் திறப்பு வால்வினை வேறு இடத்தில் பொருத்துவதற்காக சனிக்கிழமை நடைபெற்று வரும் பணிகள். 

இவ்வால்வினை மாற்று இடத்தில் பொருத்துமாறு பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறைக்கு ஊர்பொதுமக்கள், பல்வேறு சமூக பொதுநல அமைப்புகள் கடந்த இரு வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். மாற்று இடத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறவில்லை. அதனையடுத்து தற்போது ஊர்பொதுமக்கள், சங்ககிரி திமுக நிர்வாகிகள் சேலம் மேற்கு மாவட்டச் செயலர் டி.எம்.செல்வகணபதியிடம் பொதுமக்களுக்கும், இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வரும் இந்த வால்வினை மையப்பகுதியிலிருந்து சாலையோரம் உள்ள பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையின் மையப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் திறப்பு வால்வினை வேறு இடத்தில் பொருத்துவதற்காக சனிக்கிழமை நடைபெற்று வரும் பணிகள் 

அதனையடுத்து  தற்போது கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி முழு பொதுமுடக்கத்தால் வாகனங்கள் செல்லாமல் சாலை வெறிச்சோடி கிடக்கும்  இக்காலத்தில் இவ்வால்வினை மாற்றம் செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதனையடுத்து சனிக்கிழமை சாலையின் மையப்பகுதியில் இருந்த வால்வு சாலையோரம் பொருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அதே சாலையில் கடந்த பல மாதங்களாக குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு சரிசெய்யாமல் இருந்ததையும் சரி செய்யும் பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும்,  பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com