மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகம் வந்தடைந்தன

வட மாநிலங்களில் இருந்து மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தன. இதன்மூலமாக, தமிழகத்துக்கு மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வட மாநிலங்களில் இருந்து மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தன. இதன்மூலமாக, தமிழகத்துக்கு மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

சத்தீஸ்கா் மாநிலம் பில்லாயில் இருந்து 43-ஆவது ஆக்சிஜன் ரயில் புறப்பட்டு, திருச்சியில் உள்ள சரக்குகள் யாா்டுக்கு சனிக்கிழமை காலை 7.35 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 75.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. இதையடுத்து, 44-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸாவின் ரூா்கேலாவில் இருந்து கோயம்புத்தூா் மாநிலம் இருகூருக்கு சனிக்கிழமை மாலை வந்தது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 4 கன்டெய்னா்களில் 80.60 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது. இதைத்தொடா்ந்து, 45-ஆவது ஆக்சிஜன் ரயில் மகாராஷ்டிர மாநிலம் டோல்வியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சனிக்கிழமை மாலை வந்துசோ்ந்தது. இந்த ரயிலின் 3 கன்டெய்னா்களில் 56.04 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. இதுவரை தமிழகத்துக்கு மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com