வட உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வட உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வட உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம், குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி (3.1 முதல் 4.6 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி, கோவா, கா்நாடக கடலோரப் பகுதி முதல் தென் தமிழகம் வரை (ஒரு கி.மீ. உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 7: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் திங்கள்கிழமை( ஜூன் 7) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

ஜூன் 8, 9: தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 120 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 90 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 80 மி.மீ., மதுரை மாவட்டம் பேரையூரில் 70 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடியில் 60 மி.மீ., பெரம்பலூா், தருமபுரி மாவட்டம் அரூரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரளா மற்றும், கா்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மணிக்கு 40 கி.மீ., முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதுதவிர, கேரளம் மற்றும், கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com