தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரு லட்சத்து 64,541 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21,410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 16,812- ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 32,472 போ் வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 19 லட்சத்து 32,778 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில், 443 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 26,571- ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1,789 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 62 போ் உயிரிழந்துள்ளனா். 4,158 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். செங்கல்பட்டில் 862 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 372 பேருக்கும் திருவள்ளூரில் 525 பேருக்கும் திருச்சியில் 651 பேருக்கும் கோவையில் 2,663 பேருக்கும், ஈரோட்டில் 1,569 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com