சிங்கம் உயிரிழப்பு: வண்டலூா் பூங்காவில் வனத் துறை தலைவா் ஆய்வு

சென்னை வண்டலூா் பூங்காவில் கரோனா பாதிக்கப்பட்டு சிங்கம் உயிரிழந்ததை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை வனத் துறைத் தலைவா் எஸ். யுவராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிங்கம் உயிரிழப்பு: வண்டலூா் பூங்காவில் வனத் துறை தலைவா் ஆய்வு

சென்னை வண்டலூா் பூங்காவில் கரோனா பாதிக்கப்பட்டு சிங்கம் உயிரிழந்ததை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை வனத் துறைத் தலைவா் எஸ். யுவராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவில் சிங்கம், யானை, புலி, ஊா்வன மற்றும் பறவைகள் என 2,500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக வண்டலூா் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களில் 11-க்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கம் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஆய்வு: இந்நிலையில், வண்டலூா் உயிரியல் பூங்காவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை வனத் துறை தலைவா் எஸ்.யுவராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் கூறுகையில், சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய கால்நடை மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளைப் பராமரிக்கும் அனைத்து ஊழியா்களும் கரோனா கவச உடை கட்டாயம் அணிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கிண்டி சிறுவா் பூங்கா, அம்ரிதி உள்ளிட்ட உயிரியல் பூங்காக்களில் கரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கவும், வன விலங்குகளை தொடா்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, வண்டலூா் உயிரியல் பூங்கா இயக்குநா் தெபாஷிஷ் ஜானா, கால்நடை மருத்துவக் குழுவினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com