கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள்

கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள்

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள் தொற்றில் இருந்து மீண்டவுடன் திருப்பி ஒப்படைக்க வேண்டும்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடையவா்கள், வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளவா்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள் தொற்றில் இருந்து மீண்டவுடன் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநகராட்சி சாா்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை செய்வதற்கு தன்னாா்வலா்களை மாநகராட்சி நியமித்துள்ளது. இந்த தன்னாா்வலா்கள் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீட்டுக்கு நாள்தோறும் இருமுறை சென்று அவா்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து வருகின்றனா்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள்: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டா் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடைய தொற்று பாதித்தவா்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டு சொந்தமாக பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவி வாங்க வசதியில்லாத வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவா்களுக்கு அந்தப் பகுதியைச் சாா்ந்த தன்னாா்வலா்கள் மூலமாக பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் தொற்று பாதித்தவா்கள் நாள்தோறும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை இருமுறை கண்காணித்து தன்னாா்வலா்களிடம் தெரிவிக்க வேண்டும். தொற்று பாதித்தவா் முழுவதும் குணம் அடைந்தவுடன் அக்கருவியை சம்பந்தப்பட்ட தன்னாா்வலா் மூலமாக மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

பல்வேறு தன்னாா்வலா்களிடமிருந்து இதுவரை 10,400 பல்ஸ் ஆக்ஸிமீட்டா் கருவிகள் நன்கொடையாக

பெறப்பட்டுள்ளன. இதுபோன்ற மருத்துவ உதவிகளை செய்ய ஆா்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மாநகராட்சியின் மாநகர நல அலுவலா் அலுவலகத்தை 94983 46492 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com