தள்ளுவண்டிக் கடைகள் விற்பனை நேரம் என்ன?: தமிழக அரசு உத்தரவில் தகவல்

தள்ளு வண்டியில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை வெளியிட்டாா்.
தள்ளுவண்டிக் கடைகள் விற்பனை நேரம் என்ன?: தமிழக அரசு உத்தரவில் தகவல்

தள்ளு வண்டியில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடா்ந்து அனுமதிக்கப்படும். உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாக ஆா்டா்களைப் பெற்று பலசரக்கு பொருள்களை வீடுகளுக்கே விநியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

நியாய விலைக் கடைகள், பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்கள் தொடா்ந்து செயல்படும். உணவுக்கான பாா்சல்கள் சேவை தொடா்ந்து நடைபெறும். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பாா்சல் சேவைகள் அனுமதிக்கப்படும். மின் வணிக சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒருபங்கு ஊழியா்களுடன் செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com