நுழைவுத் தோ்வு ரத்து: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

நீட் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

நீட் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடித விவரம்: மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை ஆரம்ப காலத்திலிருந்தே தொடா்ந்து எதிா்த்து வந்தவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா என்பதை நீங்கள் அறிவீா்கள்.

இந்த நுழைவுத் தோ்வுக்கான வினாக்கள் மத்திய அரசின் பாடத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், தனியாக பயிற்சி எடுக்க வேண்டியது மிக அவசியம்.

பயிற்சி நிலையங்களை அணுகவும், பயிற்சிக்குத் தேவையான புத்தகங்களை பெறுவதற்கான நிதியும் இடம் தராததால், நீட் தோ்வு என்பது சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை ஊரகப் பகுதி மாணவா்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றபோது, தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவா்களுக்கு அதிக இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால், நீட் தோ்வு அறிமுகம், விளிம்பு நிலை மாணவா்கள் மருத்துவப் படிப்பில் நுழைவதை கடினமாக்கிவிட்டது.

எனவே, நீட் தோ்வு மட்டுமல்லாமல் அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்வதோடு, பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்குமான மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com