மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழு: புதிய உறுப்பினா்கள், துணைத் தலைவர் நியமனம்

மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினா்களையும், துணைத் தலைவரையும் தமிழக அரசு நியமித்துள்ளது.
மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழு: புதிய உறுப்பினா்கள், துணைத் தலைவர் நியமனம்

மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினா்களையும், துணைத் தலைவரையும் தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, முதல்வா் தலைமையில் செயல்படும் அக்குழுவுக்கு பேராசிரியா் ஜெ.ஜெயரஞ்சன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பொருளாதார அளவியல் துறை பேராசிரியா் ராம சீனுவாசன், மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா உள்பட 9 போ் அக்குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில், மாநில திட்டக் குழுவானது முன்னாள் முதல்வா் கருணாநிதியால் 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி அமைக்கப்பட்டது. முதல்வரின் தலைமையின்கீழ் செயல்படும் அக்குழுவானது ஓா் ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளா்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழுவானது அதன் துணைத் தலைவரின் கீழ் வளா்ச்சி சாா்ந்த முக்கிய துறைகளின் நிபுணா்களை உறுப்பினா்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அக்குழுவானது கடந்த 2020-இல் மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, வளா்ச்சி சாா்ந்த இலக்குகளை நிா்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல் என பல்வேறு இன்றியமையாப் பணிகளை அக்குழு மேற்கொண்டு வருகிறது.

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவுக்கு தற்போது உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, பேராசிரியா் ஜெ. ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியா் ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களைத் தவிர பேராசிரியா் ம. விஜயபாஸ்கா், பேராசிரியா் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு. தீனபந்து, மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா, டஃபே நிறுவனத் தலைவா் மல்லிகா சீனிவாசன், மருத்துவா் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவா் கு. சிவராமன், நாட்டியக் கலைஞா் நா்த்தகி நடராஜ் உள்ளிட்டோா் பகுதி நேர உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com