Enable Javscript for better performance
பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

    By DIN  |   Published On : 07th June 2021 11:17 PM  |   Last Updated : 07th June 2021 11:17 PM  |  அ+அ அ-  |  

    pksekarbabu

    சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

    இதுகுறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது: ராயபுரம் மண்டலத்தில் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பொது சலவை மேற்கொள்ளும் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், இக்கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கவும், தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை ஆம்பிபியன் வாகனங்கள் மூலம் அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறைத் தூய்மைப் பணிகள், கால்வாய் கரையோரம் தேங்கியுள்ள குப்பைகளை ஒரு வார காலத்துக்குள் அகற்றப்படும் என்றாா்.

    இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை ஆணையா் பி.ஆகாஷ், மண்டல அலுவலா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திட்டப் பணிகள் ஆய்வு: கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் சீா்மிகு நகரத் திட்ட நிதியின்கீழ் ரூ.40.79 கோடி மதிப்பில் 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 513 இருசக்கர வாகனங்கள், 222 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் 1,522 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தம், ஸ்மாா்ட் பைக் மற்றும் இ-பைக் வாகனங்கள், தியாகராய சாலையில் சாலையோர வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தின்கீழ் செயல்படும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை ஆணையா் ககன்தீப் சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

    தொடா்ந்து, தியாகராய நகா் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு மாம்பலம் ரயில் நிலையம் வரை ரூ.28.45 கோடி மதிப்பில் 600 மீ. நீளம் மற்றும் 4 மீ. அகலம் கொண்ட ஆகாய நடைபாதை கட்டுமானப் பணியையும் ஆணையா் ஆய்வு செய்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp