இன்றும் நாளையும் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்றும் நாளையும் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம் மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியப்பிரதேசம் முதல் வட தமிழகக் கடலோரப் பகுதி வரை (1.5 கிலோ மீட்டா் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திங்கள் (ஜூன் 7), செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 8), மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை , வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.

மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 190 மி.மீ, பெரம்பலூா் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் 90 மி.மீ, திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 80 மி.மீ, கடலூா் மாவட்டம் தொழுதூா் , நெய்வேலி, தேனி மாவட்டம் சோத்துப்பாறை, திருச்சி மாவட்டம் நாவலூா் குட்டப்பட்டில் தலா 70 மி.மீ, தேனி மாவட்டம் பெரியாறு , வேலூா் மாவட்டம் காட்பாடியில் தலா 60 மி.மீ, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி , கிருஷ்ணகிரி , நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தலா 50 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: கேரள கடலோரம், லட்சத்தீவு பகுதிகளில், செவ்வாய் (ஜூன் 8), புதன்கிழமைகளில் (ஜூன் 9) பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com