முகக் கவசம் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கு விலை நிர்ணயம்: தமிழக அரசு

​மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கான விலையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை நிர்ணயித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கான விலையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை நிர்ணயித்துள்ளது.

மேலும் இந்த 15 மருத்துவப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, என்-95 முகக் கவசத்தை ரூ. 22-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 3 வெவ்வேறு சர்ஜிகல் முகக் கவசங்களை முறையே ரூ. 3, ரூ. 4, ரூ. 4.50-க்கு விற்க வேண்டும். 200 மில்லி சானிடைசர் ரூ. 110-க்கு விற்பனை செய்ய வேண்டும்.

இதுதவிர, பிபிஇ உடை (1 யூனிட்) - ரூ. 273, பல்ஸ் ஆக்சிமீட்டர் ரூ. 1,500, ஆக்சிஜன் முகக் கவசம் (1 யூனிட்) - ரூ. 54 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com