வேதாரண்யம் - தலைஞாயிறு: இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு ஒன்றியங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (ஜூன் 8) ஆர்ப்பாட்டம்
தலைஞாயிறில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
தலைஞாயிறில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு ஒன்றியங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (ஜூன் 8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசி தயாரிப்பு மையங்களையும் திறந்து செயல்படுத்த வேண்டும்,  செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்  எஸ்.எம்.டி. மகேந்திரன் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளர் எஸ்.சம்பந்தம் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே.பாஸ்கர், ஏஐடியுசி நிர்வாகிகள் சொக்கலிங்கம், செந்தில்குமார், வி.எம். ராமதாஸ் , முருகானந்தம், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.ஐயப்பன், அர்பத், தலைஞாயிறு நகர செயலாளர் சி. முகுந்தன்,  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளர் கவாஸ்கர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

வேதரண்யம் ஒன்றியம்  தகட்டூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு  இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு. பாண்டியன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com